Home /News /entertainment /

சுஷாந்த் மரண வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிஐ... மும்பை போலீசுக்கு கிடுக்குப்பிடி கேள்விகள்

சுஷாந்த் மரண வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிஐ... மும்பை போலீசுக்கு கிடுக்குப்பிடி கேள்விகள்

sushant singh

sushant singh

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

    பீகாரை பூர்விகமாக கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து 10 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு மும்பைக்கு சென்றனர். இந்த குழுவில் தடயவியல் நிபுணர்களும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. குழுக்களாக பிரிந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் மும்பை போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றனர்.

    படிக்க...”2011 உலகக்கோப்பையில் உங்களின் ஊக்கம் மிகுந்த பங்கை மறக்கமுடியாது” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த பிரதமரின் கடிதம்

    சுஷாந்த் மரணமடைந்து சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுஷாந்த் இறந்ததும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை சுஷாந்தின் உறவினர்கள் பீகாருக்கு எடுத்துச்சென்றதால் தடயங்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

    சட்ட விதிகளை மீறி போலீஸ் எப்படி சுஷாந்த்தின் உறவினர்களை பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என சிபிஐ அதிகாரிகள் போலீசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சுஷாந்த் மரணமடைந்த பின்னர் மும்பை போலீசார் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து, தத்ரூபமாக சில காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் நடித்துக்காட்டி அவற்றை பதிவு செய்ய உள்ளனர்.

    மேலும் படிக்க...எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

    முதல்நாளிலேயே பல அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CBI, Sushant Singh Rajput

    அடுத்த செய்தி