சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் ரூ.2000 கோடியா?

தில் பேச்சாரா திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியான 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் ரூ.2000 கோடியா?
நடிகர் சுஷாந்த் சிங் மரணம்
  • Share this:
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுஷாந்த் சிங் கடைசியாக ஜான் க்ரீன் எழுதிய "தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தில் பேச்சாரா என்ற படத்தில் நடித்திருந்தார். முகேஷ் சாப்ரா இயக்கியிருந்த இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் மரணத்தை அடுத்து இத்திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தபோது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தில் பேச்சாரா படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.


ஆனால் ஜூலை மாதம் 24-ம் தேதி இத்திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. சுஷாந்துக்காக தில் பேச்சாரா திரைப்படத்தை அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக ஹாட் ஸ்டார் வெளியிட்டது.

திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், திரையரங்கில் டிக்கெட் விலை ரூ.100 என்றால் கூட ரூ.950 கோடி ரூபாயை இத்திரைப்படம் வசூலித்திருக்கும் என்றும் கணிக்கின்றனர் பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள்.

2019-ம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக திரையரங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.207-ஆக உள்ள நிலையில் தில் பேச்சாரா படம் பெற்ற பார்வைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் ரூ.2000 கோடியை முதல் நாளிலேயே இத்திரைப்படம் வசூலித்திருக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வைகளைப் பெற்ற படமாக தில் பேச்சாரா திரைப்படம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading