Home /News /entertainment /

“காபி, தேநீரில் 4 சொட்டுகளை விட்டு, குடிக்க வையுங்கள்” - வெளியான வாட்சப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்பு வழக்கு..

“காபி, தேநீரில் 4 சொட்டுகளை விட்டு, குடிக்க வையுங்கள்” - வெளியான வாட்சப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்பு வழக்கு..

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில், நடிகை ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் திடீர் திருப்பமாக ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வுசெய்ததில் நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங்குடன் இணைந்து வசித்துவந்த நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    மேலும் படிக்க...கொரோனா தடுப்புப்பணிகள் ஆய்வு: முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் மீண்டும் பயணம்..

    அப்போது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்தது தொடர்பான நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை கைப்பற்றினர்.

    நீக்கப்பட்ட வாட்சப் செய்தி ஒன்றில், ஜெயா சாஹா என்பவர், ரியாவிடம் பெயர் குறிப்பிடாமல் ஒரு பொருளை குறிப்பிட்டு, ”காபி, நேநீர் அல்லது தண்ணீரில் நான்கு சொட்டுகளை விட்டு, அதை அவனைக் குடிக்க வையுங்கள். 30 - 40 நிமிடங்களில் எல்லாம் நடக்கும்” என்கிறார். அதற்கு ரியா, `மிக்க நன்றி’ என்கிறார். அதற்கு ஜெயா, பிரச்சனை இல்லை. இது வேலை செய்யும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    இதுதொடர்பாக அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ரியா உள்ளிட்டோர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.



    ரியா சக்போர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வாட்ஸ்அப் செய்திகளில் எம்.டி.எம்.ஏ, மரிஜுவானா போன்ற போதைப்பொருட்களை ரியா அடிக்கடி பயன்படுத்துவது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rhea Chakraborty, Sushant Singh Rajput

    அடுத்த செய்தி