தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
சுஷாந்த் சிங் ராஜ்புத்
  • Share this:
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பை பந்தராவில் உள்ள அவரது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அறையின் கதவை உடைத்து  உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திரைபடங்களில் நடிப்பதற்கு முன் சின்னத்திரையில் நடித்து வந்தார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது முன்னாள் மேனஜர் திசா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவிற்கு வருத்தத்தையும், அவரது குடும்பத்தாருக்கு தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading