போதைப்பொருள் விவகாரம் : தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர் செல்போன்கள் பறிமுதல்..

நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விவகாரம் : தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர் செல்போன்கள் பறிமுதல்..
தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 3:28 PM IST
  • Share this:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரம் எழுந்ததால், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைதானார். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகி விளக்கமளித்தார்.


இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.சரண் தகவல்..

இதனிடையே நடிகை ரகுல் ப்ரீத், ஊடகங்கள் தன்னைப் பற்றி தவறாக சித்தரிப்பதை நிறுத்த உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading