சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை திரைப்படமாக்க முடிவெடுத்த இயக்குநர்...

சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நிகில் ஆனந்த் இயக்குகிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை திரைப்படமாக்க முடிவெடுத்த இயக்குநர்...
நடிகர் சுஷாந்த் சிங் மரணம்
  • Share this:
கடந்த ஜுன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் நடிகர் சுஷாந்த் சிங். கை போ சே, ஷூத்தேஸி ரொமான்ஸ், டிடெக்டிவ் ப்யோம் கேஷ் பாக்க்‌ஷி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் மரணத்துக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கயிறு கழுத்தை இறுக்கியதால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதுடைய சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள் திரைத்துறையில் செலுத்தி வரும் ஆதிக்கம் மற்றும் அது சார்ந்த அரசியலே சுஷாந்த் சிங்கின் மரணத்துக்கு காரணம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.


இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நிகில் ஆனந்த் இயக்குகிறார்.

இதுகுறித்து இயக்குநர் நிகில் ஆனந்த் கூறுகையில், ”சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு சராசரி மனிதருக்கும் சுஷாந்த் ஒரு உதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த மனிதரும் கூட. சினிமாத்துறையில் இருக்கும் பலரையும் ஊக்குவிக்கும் படமாக இது அமையும்” என்றார்.

மேலும் படிக்க: முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி முதுகில் குத்துவார்கள் - நடிகர் அஸ்வின் பகீர் பதிவுமேலும் வாரிசு அரசியலை விடுத்து திறமையானவர்களுக்கு பாலிவுட் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறிய நிகில் ஆனந்த், கொரோனா பிரச்னை முடிவடைந்தவுடன் சுஷாந்த் சிங்கின் பயோபிக் திரைப்படத்தின் ஷூட்டிங்க் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading