சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வித்தியாசமாக வெளியான டைட்டில் லுக்!

Web Desk | news18
Updated: April 13, 2019, 5:38 PM IST
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வித்தியாசமாக வெளியான டைட்டில் லுக்!
நடிகர் சூர்யா| இயக்குநர் சுதா கோங்கரா
Web Desk | news18
Updated: April 13, 2019, 5:38 PM IST
சூர்யாவின் 38-வது பட டைட்டில் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சூர்யா தேதிகள் ஒதுக்கியுள்ளார்.இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து குனித் மோங்காவும் தயாரிக்கிறார். குனித் மோங்காவிடம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை உள்ளது.

ஜி.ஆர்.கோபிநாத் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து 1971 போரிலும் பங்கேற்றுள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றிய சக அதிகாரியின் துணையோடு ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவினார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் சர்வம் தாளமயம் பட ஹீரோயின் அபர்ணா முரளி நடிக்கிறார்.கடந்த 7-ம் தேதி பூஜையுடன் படம் துவங்கப்பட்ட நிலையில் சூரரைப் போற்று என்ற படத்தின் டைட்டிலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த டைட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை காப்பான் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 70-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்: முக்கிய கேரக்டரில் சத்யராஜ்பூனம் பாஜ்வாவின் புதிய புகைப்படங்கள்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...