சூர்யாவின் என்.ஜி.கே உரிமையைக் கைப்பற்றிய ’மெர்சல்’ நிறுவனம்

என்.ஜி.கே படத்தின் மியூசிக் உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Sheik Hanifah | news18
Updated: December 7, 2018, 5:24 PM IST
சூர்யாவின் என்.ஜி.கே உரிமையைக் கைப்பற்றிய ’மெர்சல்’ நிறுவனம்
என்.ஜி.கே. பட போஸ்டர்
Sheik Hanifah | news18
Updated: December 7, 2018, 5:24 PM IST
என்.ஜி.கே படத்தின் மியூசிக் உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் என்.ஜி.கே படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து தள்ளிப் போனது. இதையடுத்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Actress Rakul Preet Singh | ரகுல் ப்ரீத்தி சிங்-கின் கியூட் போடோஸ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிண்டும் துவங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.

Actress Sai Pallavi

அதன்படி, இந்தப் படத்தின் மியூசிக் உரிமையை புகழ்பெற்ற சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Loading...இதையடுத்து படத்தின் முதல்பாடல் எப்போது வரும் என்று ரசிகர்கள் தங்களது கேள்வியை முன் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

மேடையில் திடீரென்று மயங்கி விழுந்த அமைச்சர் நிதின் கட்கரி - வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்