Home /News /entertainment /

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

சூர்யா ஜெய்பீம் படத்தை தொடர்ந்து இதிலும் வழக்கறிஞராக நடித்துள்ளார். மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

  • News18
  • Last Updated :
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்துப் பின்னணியில் குடும்ப உறவுகளையும் செண்டிமெண்டையும் கலந்து இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கூடுதலாக ஆக்ஷன் அதிரடியும் படத்தில் உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவமும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா ஜெய்பீம் படத்தை தொடர்ந்து இதிலும் வழக்கறிஞராக நடித்துள்ளார். மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் 18ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என இயக்குநர் பாண்டிராஜ் இன்று அறிவித்துள்ளார்.

Also read... இரவு முழுவதும் கார் ஓட்டிக் கொண்டே கடைசி விவசாயியை விமர்சித்த மிஷ்கின்

சூர்யாவின் கடைசி இரு படங்களான சூரரைப்போற்று, ஜெய் பீம் இரண்டும் நேரடியாக ஓடிடிடியில் வெளியான நிலையில் எதற்கும் துணிந்தவன் திரையரங்கில் வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya

அடுத்த செய்தி