நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யாதேவிக்கும், கைதுசெய்த பெண் இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா தொற்று..

நடிகை வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர்.

நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யாதேவிக்கும், கைதுசெய்த பெண் இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா தொற்று..
சூர்யா தேவி கைது
  • Share this:
நடிகை வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சூர்யா தேவியை விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார். சூர்யா தேவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனக்கும்  ஆய்வாளர் சோதனை செய்து கொண்டுள்ளார். தற்போது சோதனை முடிவில் பெண் ஆய்வாளர் ஜோதி மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து சூர்யா தேவி தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரியவந்துள்ளது.மேலும் சூர்யாதேவி கைது செய்யப்பட்டபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல் நிலையத்தில் உடன் இருந்ததாக கூறப்பட்டது. எனவே  நடிகை வனிதா மற்றும் கைதின் போது உடன் இருந்த மற்ற காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading