• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Surya40: சூர்யாவின் 40வது திரைப்படம்: இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

Surya40: சூர்யாவின் 40வது திரைப்படம்: இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

#சூர்யா40

#சூர்யா40

#Surya40 - சூரரைப் போற்றும் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், த.செ.ஞனவேல் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஆகியவற்றில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். அவரின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

  • Share this:
நடிகர் சூர்யாவின் 40வது திரைப்படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக நடிகர் சூர்யா திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.  சர்வதேச அங்கீகாரத்தையும் அப்படம் பெற்றது. ஷாங்காய்  சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் இப்படம் தேர்வாகியுள்ளது.

சூரரைப் போற்றும் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் ஒன்று,  த.செ.ஞனவேல் இயக்கத்தில் உருவாகி வருகிறது. பெயர் சூட்டப்படாத இந்த படத்தை சூர்யாவின்  சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கிறது.  மற்றொரு திரைப்படமான வாடிவாசலை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யாவின் 40வது திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ள நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.  படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றைய இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சூர்யாவின் 40வது திரைப்படம் 35 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்ட பின்னர் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாகவும் படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.  ஜூலை மாதம் வரை பொருத்திருக்கும்படியும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். பாண்டிராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் சூர்யா ரசிகர்கள் அவரிடம் திரைப்படம் குறித்து தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் இந்த தகவலை பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: