ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்ன அசால்ட்டா தலைகீழா நிக்கிறீங்க! ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ..

என்ன அசால்ட்டா தலைகீழா நிக்கிறீங்க! ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ..

ஜோதிகா வொர்க் அவுட் வீடியோ

ஜோதிகா வொர்க் அவுட் வீடியோ

Actress Jyothika : நடிகை ஜோதிகாவின் வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஜோதிகாவின் வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ ஒன்று இப்படிலாம் கூட வொர்க் அவுட் பண்ண முடியுமா ? என நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.

  நடிகை ஜோதிகா 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், திருமணத்திற்கு திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2015 ஆம் ஆண்டு ‘36’வயதினிலே என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்தார். ஜோதிகாவிற்கு ரசிகர்கள் அன்பை வாறி இரைத்தார்கள்.தொடர்ந்து மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் இப்படி பல படங்களில் நடித்தார்.சூர்யா - ஜோதிகாவும் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். 2D தயாரிக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படத்திற்காக படத்தின் தயாரிப்பாளரான ஜோதிகா தேசிய விருதும் பெற்றார்.சூர்யா, ஜோதிகா தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

  ஓராண்டுக்கும் மேல் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மம்முட்டியுன் இருந்து மலையாள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ‘காதல்’. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜியோ பேபி இயக்குகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

  also read : 'இதனால தான் உடல் எடையை குறைச்சேன்..' சோகக்கதையை சொன்ன ஐஸ்வர்யா மேனன்.!

  இந்நிலையில் ஜோதிகா இன்று வொர்க் அவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வளவு வெறித்தனமாக ஒருவரால் வொர்க் அவுட் செய்ய முடியுமா என்று இந்த வீடியோவை பார்க்கும் போது தோன்றுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Jyotika (@jyotika)  இந்த வீடியோவில் தலைகீழாக நிற்பது, தலைகீழாக நடப்பது, கைகளுக்கு தனியாக, கால்களுக்கு தனியாக இப்படி பல விதமான வொர்க் அவுட்டை செய்கிறார். ஒவ்வொரு வொர்க் அவுட்டும் பார்ப்பதற்கே மிகவும் கடினமாக தெரிகிறது. வீடியோவின் கேப்ஷனில் ’இந்த பிறந்தநாளுக்கு எனக்கு நானே பரிசு கொடுத்துக்கொண்டேன்,அது தான் ஃபிட்னஸ் மற்றும் வலிமை. வயது என்னை மாற்ற அனுமதிக்கமாட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

  ’காதல்’ படத்தின் அறிவிப்பு வெளியானதும் ஜோதிகா உடல் எடையை குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் மூலன் அந்த படத்திற்காக தான் ஜோதிகா இவ்வளவு கடினமாக உழைத்து உடல் எடையை குறைக்கிறார் என்று கூறப்படுகிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actress Jyothika