Surya Vijay Sethupathi: சண்டைக்காட்சியில் தெறிக்கவிடும் விஜய் சேதுபதி மகன் - வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதியுடன் அவரது மகன்

குத்துவது, உதைப்பது மற்றும் தன்னை தற்காத்துக் கொள்வது என சிறப்பாக செயல்படுகிறார் சூர்யா.

  • Share this:
    நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவின் ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 2015-ல் 'நானும் ரவுடி தான்' படத்தில் தனது தந்தையின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் மீண்டும் 2019-ல் வெளியான சிந்துபாத் படத்தில் தனது தந்தையுடன் நடித்தார். இந்நிலையில் தற்போது அவர் எதிர்காலத்தில் ஹீரோவாவதற்கான முயற்சிகளில் இருப்பதாகத் தெரிகிறது.

    இந்த குழந்தை நட்சத்திரம் தனது நண்பருடன் சில அதிரடி காட்சிகளைப் பயிற்சி செய்யும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மானாட மயிலாட' புகழ் கோகுல் நாத்துடன், சில அதிரடி காட்சிகளில் ஈடுபட்டிருக்கும் சூர்யா குத்துவது, உதைப்பது மற்றும் தன்னை தற்காத்துக் கொள்வது என சிறப்பாக செயல்படுகிறார். இதை வைத்துப் பார்க்கும் போது விரைவில் சூர்யா, ஹீரோவாக களம் இறங்குவார் எனத் தெரிகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Gokulnath (@gokulnath_1208)






    இதற்கிடையே, விஜய் சேதுபதி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்' உட்பட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அதில் பாலிவுட் படங்களும் அடங்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: