1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் ஜோதிகா, சூர்யா இணைந்து நடித்தனர். அதையடுத்து காக்க காக்க, பேரழகன் இப்படி பல படங்களில் ஒன்றாக நடித்த சூர்யா- ஜோதிகாவுக்கு இடையில் காதல மலர்ந்தது.சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருப்பார்கள்.
பின்பு 2006 ஆம் ஆண்டு ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.சமீபத்தில் சூர்யா,ஜோதிகா மகள் தியா 10 ஆம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்களின் விவரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சூர்யா, ஜோதிகா, தேவ், தியா ஆகியோர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த இடம் பார்ப்பதற்கு கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென இருக்கிறது. ஜோதிகா நிறைய சாகச விஷயங்களை செய்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரீல்ஸாக ஜோதிகா பதிவிட்டுள்ளார். அதில் ‘Pura Vida' என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். ‘Pura Vida'என்றால் ஸ்பானிஷில் ‘புனிதமான வாழ்க்கை’ என்பது பொருள்.
இந்த வீடியோவை எம்பட் செய்து சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் ஒரு முக்கியமான குறிப்பையும் ஜோதிகா கூறியுள்ளார். அது இந்த வீடியோவை தனது மகள் தியா எடிட் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.