Home /News /entertainment /

சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட க்ளிக்ஸ்!

சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட க்ளிக்ஸ்!

பொங்கல்

பொங்கல்

நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதுமே தீபாவளி, பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் நேற்று தைப்பொங்கல் கொண்டாட்டப்பட்ட நிலையில் இன்று சூர்ய பகவான் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கொரோனா 3ம் அலை காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் செயல்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்தப்படியே பொங்கல் கொண்டாட்டங்களை முடித்து கொண்டனர். அவர்களை போல தான் சினிமா பிரபலங்களும். வீட்டில் இருந்தப்படியே தங்கள் குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினர். கூடவே, தங்கள் ரசிகர்களுக்கு சோஷியல் மீடியா மூலம் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

    இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா வீட்டில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள், நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் ஆகியவை இணையத்தில் வைரலனாது. சிவகார்த்திகேயன் தனது மகன் பிறந்த பிறகு கொண்டாடும் முதல் பொங்கல் என்பதால் அவருக்கு இது ஸ்பெஷல் பொங்கல். இவர்களை போல் பல நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடினார்கள்.அவர்களின் புகைப்படங்களை பார்த்து மகிழலாம் வாங்க.

    இதையும் படிங்க.. ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..!

    சூர்யா - ஜோதிகா:

    நடிகர் சூர்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான ஜோதிகா இருவரும் சேர்ந்து குடும்பத்துடன் இந்த பொங்கலை கொண்டாடினர். அந்த புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jyotika (@jyotika)






    நடிகர் சிவகார்த்திகேயன்: 

    நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதுமே தீபாவளி, பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கொண்டாட்டத்திற்கு பிறகு அந்த புகைப்படங்களை மறக்காமல் சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்வார். அதே போல் இந்த முறையில் மனைவி, மகன், மகளுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.




    நடிகர் கார்த்தி: 

    நடிகர் கார்த்தி, தனது குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினார்.  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அண்ணன் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க.. டிவி சேனல்களில் வரிசைக்கட்டி நிற்கும் புதுப்படங்கள்!



     




    View this post on Instagram





     

    A post shared by Karthi Sivakumar (@karthi_offl)






    ஹேமா மாலினி : 

    நடிகை ஹேமா மாலினி மிகவும் சிம்பிளாக தனது வீட்டில் பொங்கலை கொண்டாடினார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவிலும் பகிர்ந்து கொண்டார்.






    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Surya, Celebrities, Pongal

    அடுத்த செய்தி