நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் கியூட் ரொமாண்டிக் வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் போதே காதலிக்க தொடங்கி கடைசியில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா - ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஜோதிகா இப்போது தமிழ் சினிமாவில் மீண்டும் தன்னுடை செகண்ட் இன்னிங்ஸை ஆடி வருகிறார். இதற்கு சூர்யாவும் சரி அவரின் மொத்த குடும்பமும் ஜோதிகாவுக்கு துணையாக நிற்கின்றனர். 90ஸ் கிட்ஸ் தொடங்கி 20கே கிட்ஸ்களுக்கும் லவ் லைஃபில் ரோல் மாடலாக இருக்கும் சூர்யா - ஜோதிகாவின் கியூட் ரொமாண்டிக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Suriya 42: சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்!
சமீபத்தில் பெங்களூரில் நடந்த 2022 பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் சூர்யா ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விருது நிகழ்ச்சியில் 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் விருதுகளை அள்ளின. இந்த விருது விழாவில் ஜோதிகாவும் சூர்யாவுடன் சேர்ந்து கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த விழாவில் ஜோதிகா சூர்யாவின் கையை பிடித்து மேடைக்கு அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சியில் ஜோதிகா மேடைக்கு அழைக்கப்படுகிறார். உடனே அவர் கையில் இருக்கும் பர்ஸை பின்னாடி வைத்தப்படியே சூர்யாவை பார்த்து HOLD HAND என்கிறார். உடனே சூர்யா பர்ஸை கொடு நான் பார்த்துகுறேன் நீ போ என்கிறார். ஆனால் ஜோதிகா பர்ஸ் இங்க இருக்கட்டும் come என கூறி சூர்யாவின் கையை. பிடித்து கொண்டு மேடைக்கு அழைத்து செல்கிறார். இந்த கியூட் வீடியோ இணையத்தில் பலரையும் லவ் மோடில் தள்ளியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Actress Jyothika, Kollywood, Tamil Cinema