ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூர்யா மகள் தியா வாங்கிய மதிப்பெண் இதுதான்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூர்யா மகள் தியா வாங்கிய மதிப்பெண் இதுதான்!

சூர்யா, ஜோதிகா குடும்பம்

சூர்யா, ஜோதிகா குடும்பம்

சூர்யா- ஜோதிகா மகள் தியா 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின் விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் சூர்யா 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். 1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். அதையடுத்து காக்க காக்க, பேரழகன் இப்படி பல படங்களில் ஒன்றாக நடித்த சூர்யா- ஜோதிகாவுக்கு இடையில் காதல மலர்ந்தது.

  சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருப்பார்கள்.

  பின்பு 2006 ஆம் ஆண்டு ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா,ஜோதிகா குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகும்.

  இதையும் படிங்க : சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் ஜாலி சுற்றுலா -வைரலாகும் வீடியோ

  also read : நடிகர் விஜய்யின் க்யூட் ஃபேமிலி போட்டோஸ்

  இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூர்யா மகள் தியா வாங்கியுள்ள மதிப்பெண்களின் விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதையடுத்து தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 487 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor Surya, Actress Jyothika