நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது

நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறி சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது
நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறி சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
  • Share this:
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தை அடுத்து பல தொடர் சர்ச்சைகள் நடந்து வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

வனிதாவும் அந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டுள்ளார். இதனையடுத்து போரூரில் நடிகை வனிதா, சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார்.


அந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது, சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இந்த அனைத்து புகார்களும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

Also see... ப்ளாக் பிகினியில் இலியானா... இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

புடவையில் வெரைட்டி லுக்ஸ்... பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மாவின் அசத்தல் ஆல்பம்!நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.





எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக பேசிய விவகாரத்தில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading