டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷபீர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா திரைப்படம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஆர்யா நடித்துள்ள கபிலன் கதாபாத்திரம், பசுபதி நடித்துள்ள ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரம் ஆகியவற்றை தாண்டி Dancing Rose கதாபாத்திரம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டான்சிங் ரோஸாக ஷபீர் கல்லரக்கல் நடித்துள்ளார். இடியாப்ப பரம்பரையை சேர்ந்தவராக வடிவமைக்கப்பட்டுள்ள டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தின் தன்மை, ஸ்டைல் போன்றவை ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக டான்சிங் ரோஸாக நடித்துள்ள ஷபீர் கல்லரக்கல் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!
டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நியூஸ் 18 தமிழ் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள ஷபீர், “என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இன்னும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கு அதிக கவனம் கிடைத்துள்ளது. இது அதிக மகிழ்ச்சியை தருகிறது.வாழ்க்கையில் எதையோ சாதித்த திருப்தி உள்ளது. எனக்கான அடையாளமாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சார்பட்டா சொல்லும் அரசியல் என்ன? திமுக, அதிமுக வாதம்!
நடனம்,சிலம்பாட்டம் உள்ளிட்டவை தெரியும் என்றும் சார்பட்ட திரைப்படத்துக்காக குத்துச்சண்டை கத்துகொண்டதாகவும் தெரிவித்துள்ள ஷபீர், ‘ தசைகளை பழக்கப்படுத்த சிரமப்பட்டேன். தற்காப்புக்கலைகளை தெரிந்தது படத்துக்கு உதவியது’ என்றும் கூறியுள்ளார்.
மேலும், டான்சிங் ரோஸ் என்ற பெயரை கேட்டதுமே ஆச்சரியமாக இருந்தது. அந்த கதாபாத்திரம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டபோது மிகவும் பிடித்துபோனது. படத்துக்கான நடிகர் தேர்வின்போது எழுத்தாளர் தமிழ் பிரபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிகவும் கலகலப்பாக சென்றது’ என்று ஷபீர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.