அண்மையில் அண்ணாத்த திரைப்பட படப்படிப்புகளை முடித்த ரஜினிகாந்த், சிறுநீரக பரிசோதனை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்தசமயத்தில், தி கிரே மேன் திரைப்பட படப்படிப்புக்காக நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவில் இருந்தார். இதனால் ரஜினியுடன் இருந்து அவரது உடல்நிலை குறித்து ஐஸ்வர்யா பார்த்துக்கொண்டார். அமெரிக்காவின் மயோ மருத்துவமனையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் நடந்து வருவது போன்ற புகைப்படம் கூட அந்த சமயத்தில் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதனிடையே, அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு, மாவட்ட நிர்வாகிகளை சென்னை வரச்சொல்லி அவசர அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்தின் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தான் இனி அரசியலில் எக்காலத்திலும் ஈடுபடப் போவதில்லை என்பதால் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரசிகர் மன்றமாக தொடர இருப்பதாக கூறினார்.
Also read: வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை நிதி அகர்வால் -போட்டோஸ்
நீண்ட காலமாக தன்னை சுற்றி வந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து மகிழ்ச்சியில் இருந்த ரஜினிகாந்தை, அவரது இரண்டாவது மகள் செளந்தர்யா மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் தாத்தா ஆனதை அவருக்கு சர்ப்ரைஸாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth, Soundarya Rajinikanth