Suriya: சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சூர்யா

'சூர்யா 40' படத்தின் இறுதி அட்டவணை ஜூலை 12-ஆம் தேதி காரைக்குடியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கிடைக்கப் போகும் சர்ப்ரைஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    கைவசம் நிறைய படங்களில் பிஸியாக இருக்கும் சூர்யா, இந்த மாதம் தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இயக்குனர் பாண்டிராஜ் - சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'சூரரைப்போற்று’ படத்தின் வெற்றியை ருசித்த சூர்யா, இப்போது ’சூர்யா 40' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்காலிகமாக சூர்யா 40 என்றழைக்கப்படும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, சூர்யாவின் பிறந்தநாளில் வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதையறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'சூர்யா 40' படத்தின் இறுதி அட்டவணை ஜூலை 12-ஆம் தேதி காரைக்குடியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமூக பிரச்னைக்காக போராடும் பவர் ஃபுல் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்னவன்னன், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் பின்னர், வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: