ரஜினியின் பேட்ட வசூலை முந்திய சூர்யாவின் காப்பான்

ரஜினியின் பேட்ட வசூலை முந்திய சூர்யாவின் காப்பான்
  • News18
  • Last Updated: September 23, 2019, 11:29 AM IST
  • Share this:
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ஓபனிங்கை சூர்யாவின் காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது.

சூர்யா-மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தொடர் தோல்விகளில் சிக்கி வந்த சூர்யாவுக்கு காப்பான் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.

செப்டம்பர் 20-ம் தேதி வெளியான காப்பான் படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் முதல் 3 நாட்களில் ரூ.27 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இதேபோல் கேரளாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சூர்யாவுடன் மோகன்லாலும் இணைந்துள்ளதால் கேரளாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா படம் கல்லா கட்டி வருகிறது. 3 நாட்களில் ரூ.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

2019-ம் ஆண்டில் வெளியான படங்களில் ரஜினியின் பேட்ட திரைப்படம் தான் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது சூர்யாவின் காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் மலையாள படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் காப்பான் படத்தின் மோகன் லால் நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. சூர்யாவின் காப்பான் படம் 3 நாட்களில் ரூ.4.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. என்ஜிகே படத்தின் மொத்த வசூலை விடவும்  இது அதிகம்

தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் ரசிகர்கள் அதிகம். சூர்யா படம் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வசூலை பெறும். ஆனால் காப்பான் படத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லை. வரும் நாட்களில் படம் வசூலை ஈட்டுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்


Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading