• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யா படத்துக்கு 'ஏ' சான்றிதழ் - குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை!

சூர்யா படத்துக்கு 'ஏ' சான்றிதழ் - குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை!

சூர்யா

சூர்யா

சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பு வெளியாகிறது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நான்குப் படங்களை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது. இந்த நான்கில் முதல் படமான இராமே ஆண்டாலும் இராவணோ ஆண்டாலும் சமீபத்தில் வெளியானது.

ஜோதிகா, சசிகுமார் நடித்திருக்கும் உடன்பிறப்பே ஆயுபூஜையை முன்னிட்டு வெளியாகிறது. சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பு வெளியாகிறது

ஜெய் பீமில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். ஆதிவாசிகளுக்கு எதிரான வழக்கில் அவர் ஆஜராகி நீதியை நிலைநாட்டுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1993 இல் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார்

பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்பட பலர் இதில் நடித்து வருகின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். கே.கதிர் கலை இயக்கம். சண்டைப் பயிற்சி அன்பறிவு



இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்குத்தகுந்த '' சான்றிதழை வழங்கியுள்ளது. பொதுவாக வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் அதிகமாக இருந்தால் '' சான்றிதழ் வழங்கப்படும்.

Also read... நயன்தாரா தயாரிப்பில் நடிக்கும் கவின், வாணி போஜன்?

ஜெய் பீம் படத்திற்கு எதன் அடிப்படையில் '' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 44 நிமிடங்கள். மிக நீண்டப் படம்

ஜெய் பீம் திரையரங்கில் வெளியாகாமல் நவம்பர் 2 நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனால், 18 வயதிற்குட்பட்டவர்கள் படத்தைப் பார்த்தாலும் தணிக்கைக்குழுவால் அதனை கண்காணிக்கவோ, தடுக்கவே முடியாது என்பது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: