முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனைவி ஜோதிகாவின் காதல் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...!

மனைவி ஜோதிகாவின் காதல் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...!

ஜோதிகா  மற்றும் மம்முட்டியுடன் சூர்யா

ஜோதிகா  மற்றும் மம்முட்டியுடன் சூர்யா

மம்முட்டி மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதல் - தி கோர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் மனைவி ஜோதிகா  மற்றும் மம்முட்டியுடன் அமர்ந்து சூர்யா உணவு உண்ணும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.

தமிழ் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா இறுதியாக உடன்பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு சுமார் ஒரு வருடத்திற்கு  மேலாக வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே அவர் தேர்வு செய்து வைத்திருந்த கதைகளையும் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் காதல் - தி கோர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய Jeo Baby இயக்குகிறார். இந்தப் படத்தை மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் கடந்த மாதம் வெளியிட்டனர்.

Also read... வெளிநாடுகளில் ஷூட்டிங் சென்ற முதல் தமிழ்ப் படம் எது தெரியுமா?

காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் முக்கிய நடிகர் நடிகைகள் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா விசிட் அடித்துள்ளார். அப்போது நடிகர் மம்முட்டியுடன் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து உணவு சப்பிட்டுள்ளனர். தற்போது அவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Actress Jyothika, Mammootty