Vijay-Suriya: சூர்யாவா, விஜய்யா...? இந்தி டப்பிங் ரைட்ஸில் முந்துவது யார்?

விஜய் - சூர்யா

விஜய்யின் சர்கார் படத்தின் இந்தி டப்பிங் உரிமை 24 கோடிகளுக்குப் போனது.

  • Share this:
    தென்னிந்திய மொழிப் படங்களின் இந்தி டப்பிங் உரிமை பெரும் தொகைக்கு வாங்கப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா படங்கள் இதில் முன்னணியில் உள்ளன.

    சில தினங்கள் முன்பு கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கியது. தொடர்ந்து அதே நிறுவனம் கமலின் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையையும் வாங்கியது. விக்ரம் இந்தி டப்பிங் உரிமைக்கு அந்நிறுவனம் 35 கோடிகள் தந்ததாக கூறப்பட்டது (சிலர் 37 கோடிகள் என்கின்றனர்). சமீபத்தில் இவ்வளவு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்தி டப்பிங் உரிமை இதுவே. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதும் ஒரு காரணம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஜய்யின் சர்கார் படத்தின் இந்தி டப்பிங் உரிமை 24 கோடிகளுக்குப் போனது. பிகில் படத்தின் உரிமை 28 கோடிகளுக்கு வாங்கப்பட்டது. கடைசியாக வெளியான மாஸ்டர் 22 கோடிகளுக்கு விலைபோனது. சூர்யாவின் வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமை சுமார் 25 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் அசுரன் இந்தி டப்பிங் அமோக வரவேற்பை பெற்றதும், வாடிவாசல் டப்பிங் உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட காரணம் என்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: