Home /News /entertainment /

Vaadivasal: சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் டைட்டில் லுக் இன்று வெளியீடு!

Vaadivasal: சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் டைட்டில் லுக் இன்று வெளியீடு!

சூர்யா

சூர்யா

சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அந்தப் படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    தற்போது சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அந்தப் படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாடிவாசல் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ’டைட்டில் லுக்’ போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார். இதையறிந்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran, Suriya

    அடுத்த செய்தி