• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vaadivasal: தொடங்கும் முன்பே விற்பனையான சூர்யாவின் வாடிவாசல் இந்தி உரிமை!

Vaadivasal: தொடங்கும் முன்பே விற்பனையான சூர்யாவின் வாடிவாசல் இந்தி உரிமை!

வாடிவாசல் சூர்யா

வாடிவாசல் சூர்யா

அசுரனை இந்தியில் வெளியிட்டிருக்கும் கோல்ட்மைன்ஸ், வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கியுள்ளதாக தாணுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

  • Share this:
    வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அதன் இந்தி டப்பிங் உரிமை பெரும் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடப் படங்களின் இந்தி டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளுக்கு தனி மார்க்கெட் உள்ளது. இந்தி தொலைக்காட்சி சேனல்களை திருப்பினால் அங்கு ஏதாவது ஒரு தென்னிந்திய சினிமா இந்தி டப்பிங்குடன் ஓடிக் கொண்டிருக்கும். அதேபோல் யூடியூபில் இந்தியில் டப் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களுக்கு தனி ரசிகர்கள்வட்டம் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியில் டப் செய்யப்பட்ட தமிழ், தெலுங்குப் படங்களை யூடியூபில் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. இந்த வியாபாரத்தில் முன்னிலையில் உள்ள நிறுவனம் கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ். இவர்கள் வெளியிட்டுள்ள இந்தி அசுரன் டப்பிங்கை யூடியூபில் இதுவரை 4 கோடி பேர் பார்த்துள்ளனர். கேஜிஎப் படத்தை 26 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். விஜய்யின் புலியை 9 கோடி பேர் பார்த்துள்ளனர். இதில் சூப்பர் ஸ்டார் என்றால் அல்லு அர்ஜுன். இவரது சரைனைடு படத்தை பென் மூவிஸ் வெளியிட்டுள்ளது. சுமார் 47 கோடி பேர் இந்தப் படத்தை யூடியூபில் பார்த்துள்ளனர்.

    அசுரனை இந்தியில் வெளியிட்டிருக்கும் கோல்ட்மைன்ஸ், வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கியுள்ளதாக தாணுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. வாடிவாசல் படம் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. வெற்றிமாறன் படத்தை இயக்குகிறார். முறைப்படி இன்னும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தின் இந்தி டப்பிங் உரிமை விற்கப்பட்டிருப்பது சாதனை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: