ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் தாமதமாகும் வாடிவாசல்... பிளானை மாற்றும் சூர்யா?

மீண்டும் தாமதமாகும் வாடிவாசல்... பிளானை மாற்றும் சூர்யா?

சூர்யா - வாடிவாசல்

சூர்யா - வாடிவாசல்

இதன் படப்பிடிப்பு ஜூன் 2023-ல் தொடங்கி, 2023 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யா- வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாக துவங்கும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் சில ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. இருப்பினும், இருவரின் முந்தைய கமிட்மென்ட் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையே சுதா கொங்கராவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை சூர்யா விரைவில் தொடங்கவுள்ளதால், 'வாடிவாசல்' படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த 3டி ஆக்‌ஷன் படம், 10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகிறது. சூர்யா தனது 42 வது படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு 'வாடிவாசல்' படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.

தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சுதா கொங்கராவுடன் சூர்யா நடிக்கும் இரண்டாவது படமாக இது இருக்கும். இதன் படப்பிடிப்பு ஜூன் 2023-ல் தொடங்கி, 2023 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு துவங்கும். இதனால் அந்த படத்திற்கான காத்திருப்பு மேலும் நீட்டிக்கப்படும்.

இதற்கிடையில், 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை இரண்டு பாகங்களாக முடித்த வெற்றி மாறன், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு பாகங்களும் குறுகிய காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

சாலையோர மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

'வாடிவாசல்' படத்தின் தாமதத்தால், அப்படம் கிடப்பில் போடப்பட்டதாக வதந்திகளை கிளம்பியது. ஆனால் தயாரிப்பாளர் தாணு அதனை மறுத்தார். இதற்கிடையே இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director vetrimaran