இந்த வருட இறுதியில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்தப் படம் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.
சூர்யாவின் திரைவாழ்க்கையில் பாலாவின் நந்தா முக்கியமான படம். அந்தப் படம்தான் இன்றைய சூர்யா உருவானதற்கான துவக்கப்புள்ளி. பிதாமகனில் சூர்யாவை அடுத்தத் தளத்துக்கு பாலா கொண்டு சென்றார். இவ்விரு படங்களின் அடித்தளத்தில்தான் சூர்யா என்ற நடிகரின் வெற்றிகள் அமைந்தன என்றால் மிகையில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இணைந்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பதாகத்தான் முதலில் கூறப்பட்டது. தயாரிப்பு மட்டும் சூர்யா. ஒரு கட்டத்தில் சூர்யாவே நடிப்பது என முடிவானது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் படம் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. சூர்யா இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
பேரழகன், வாரணம் ஆயிரம், 24, மாற்றான் என பல படங்களில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளிவந்த படம் மாற்றான். 2012 இல் வெளியானது. சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார். அதுவும் பாலா இயக்கத்தில். இந்தப் படம் தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யாயாவின் கமிட்மெண்ட் நீண்டு செல்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.