• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யா படத்தை இயக்கும் இரு முன்னணி இயக்குனர்கள்...!

சூர்யா படத்தை இயக்கும் இரு முன்னணி இயக்குனர்கள்...!

சூர்யா

சூர்யா

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்திலும், சொந்தத் தயாரிப்பில் ஜெய் பீம் படத்திலும் நடித்து வருகிறார். அதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் இருக்கிறது. இந்தப் படங்களுடன் மேலும் இரு படங்களில் அவர் நடிக்கயிருக்கிறார்.

அஜித்தை வைத்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வந்த சிவா தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை முடித்துள்ளார். இவர் இயக்குனராக பிரபலமானதே கார்த்தி நடித்த சிறுத்தை மூலம்தான். அந்தவகையில் சிவகுமார் குடும்பத்துக்கு இவர் ஏற்கனவே பழக்கமானவர். சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க உள்ளார். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ரவிக்குமார் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தில் உள்ள அப்படம் முடிந்ததும் சூர்யா படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

Also read... அக்வாமேனின் புதிய உடை, தோற்றத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வான்!

அத்துடன் சுதா கொங்கரா படத்திலும் சூர்யா நடிக்கிறார். சூரரைப்போற்று இந்தி ரீமேக் முடிந்ததும் புதிய ஸ்கிரிப்டில் சூர்யாவை நடிக்க வைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் நலன் குமாரசாமி பங்களிப்பு செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: