மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா!

சூர்யா - சுதா கொங்கரா

இதுவொரு கேங்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது.

 • Share this:
  சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

  சுதா கொங்கரா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவரது முதல்படம் இறுதிச்சுற்று. பொதுவாக பெண் இயக்குனர்கள் கையாளும் களத்துக்கு வெளியே துணிச்சலான களத்தை இறுதிச்சுற்றுக்காக தேர்வு செய்திருந்தார். படம் வெற்றி பெற்றது. இரண்டாவது படமாக சூரரைப்போற்று படத்தை இயக்கினார். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. விரைவில் இதன் இந்தி ரீமேக்கையும் அவர் இயக்க உள்ளார்.

  இதையடுத்து நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்குகிறார். இதுவொரு கேங்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது. சூர்யா இதில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகின்றன. சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Suriya to act in Sudha Kongara direction again, Suriya Soorarai Pottru, Soorarai Pottru, suriya Soorarai Pottru, suriya sivakumar soorarai pottru, soorarai pottru movie, சூர்யா சூரரைப்போற்று, சூரரைப்போற்று திரைப்பட விழா , சூர்யா, சூரரைப்போற்று, suriya sudha kongara, suriya sudha kongara movie, சூர்யா சுதா கொங்கரா, இயக்குநர் சுதா கொங்கரா
  சூர்யாவுடன் சுதா கொங்கரா


  ஆர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் தள்ளிப்போனதால், எழுத்தாளராக சுதா கொங்கராவின் படத்தில் பணியாற்றுகிறார். தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கும் வெப் தொடருக்காக சில எபிசோடுகள் நலன் குமாரசாமி எழுதித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: