விக்ரம் படத்தில் தன்னை ரோலக்ஸாக மாற்றிய மேக் அப் டிசைனருக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு 10 லட்சம் லைக்குகளை தாண்டியுள்ளது.
விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு சூர்யாவும் அவரது ரோலக்ஸ் கேரக்டரும் முக்கிய காரணமாக அமைந்தது. படத்தில் விக்ரம், சந்தானம், அமர் கேரக்டர்களின் அதிரடி ஓய்ந்த பின்னர், மீண்டும் ரோலக்ஸ் சூர்யா வடிவில் படத்திற்குள் புயல் நுழைந்தது.
ரோலக்ஸ் சூர்யாவின் என்ட்ரி, இதுவரையில்லாத தாடி, ஹேர்ஸ்டைல் ஆகியவை பெரிதும் ரசிக்கப்பட்டன. ஒரு சம்பவத்தை செய்த பின்னர், சூர்யாவின் முகம் மற்றும் மார்பில் இருக்கும் இரத்தம், தசை கரைகள் உண்மையானவை போன்றே தோற்றம் அளித்திருக்கும்.
இதையும் படிங்க - தந்தை டி.ஆரின் சிகிச்சை ஏற்பாட்டிற்காக அமெரிக்கா புறப்பட்டார் சிம்பு...
அந்த அளவுக்கு படத்தின் மேக் அப் விக்ரம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அந்த வகையில் சூர்யாவை ரோலக்ஸாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர், படத்தின் மேக்அப் டிசைனரான செரினா டிக்சீரியா ஆவார்.
இந்நிலையில் செரினாவுடன் இருக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சூர்யா, ரோலக்ஸ் லுக்கை ஏற்படுத்தியதற்காக நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் இந்த பதிவு 10 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது. சுமார் 14 ஆயிரம் கமென்டுகள் இந்த பதிவுக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க - கமலின் விக்ரம் படத்தை பாராட்டிய சல்மான் கான், சிரஞ்சீவி…
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் 2வது வாரத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும்போது இன்னும் 2 வாரங்களுக்கு விக்ரம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கன்னடம், ஆந்திரா, தெலங்கானா, கேரளாவிலும் விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு காரும் கமல் பரிசளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.