முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா… ஷூட்டிங் எப்போது தெரியுமா?

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா… ஷூட்டிங் எப்போது தெரியுமா?

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

ஜெய்பீம் படப்பிடிப்பின்போது சூர்யா, இயக்குனர் ஞானவேல்

கவுரவ தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

  • Last Updated :

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா இணைகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஓடிடியில் நேரடியாக களம் இறங்கி திரைப்படம் இந்த அளவுக்கு வரவேற்பையும், விமர்சனங்களையும் பெறுமா என்ற ஆச்சரியத்தை ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியது. இந்த படத்தின் தாக்கம் 200 நாட்களை கடந்து இன்றும் தொடரும் நிலையில், இதன் இயக்குனர் ஞானவேல், சூர்யாவுக்காக மீண்டும் ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

இதற்கு சூர்யாவும் ஓகே சொன்ன நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் தனது 41வது படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

இதையும் படிங்க - ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

வாடிவாசல் படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ப்ரீ புரொடக்சன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இடையே நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் விடுதலை படத்தின் ஷூட்டிங் முடித்து விட வாடிவாசல் இயக்குனர் வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் விடுதலை படத்தின் ஷூட்டிங் சிறுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க - நடிகை மாளவிகா மோகனனுக்கு வெப் சீரிஸை பார்க்க பரிந்துரைத்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளது. இங்கு படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதன்பின்னர் வாடிவாசல் ஷூட்டிங்கை முடிக்கும் சூர்யா அடுத்ததாக ஞானவேலுடன் இணைகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கவுரவ தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தை அடுத்த கட்டத்திற்கு சூர்யாவின் கேரக்டர் எடுத்துச் செல்லும் என்று கமல் கூறியிருந்தார். இதனால் விக்ரம் படத்தின் மீதான சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

First published:

Tags: Actor Suriya, Jai Bhim