Home /News /entertainment /

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போகும் வாடிவாசல் படக்குழுவினர்…

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போகும் வாடிவாசல் படக்குழுவினர்…

வாடிவாசல் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, இயக்குனர் வெற்றி மாறன்

வாடிவாசல் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, இயக்குனர் வெற்றி மாறன்

Suriya Vaadivaasal : சூர்யா அடுத்ததாக இயக்குனர்கள் சிவா. ஞானவேல், சுதா கொங்கரா, ரவிக்குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    சூர்யாவின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் ஒன்றை அளிப்பதற்கு வாடிவாசல் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

    ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா பாலா இயக்கத்தில் ஒரு படம், வாடிவாசல் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இடையே விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்தது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    வாடிவாசல் நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம். இதில் ஜல்லிக்கட்டு வீரராக சூர்யா நடிப்பதால் அதற்காக பிரத்யேக பயிற்சியை எடுத்துள்ளார்.

    வட சென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ள நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பில் வெற்றி மாறன் இணைகிறார்.

    சாய்பல்லவி மீதான நோட்டீசை ரத்து செய்ய முடியாது - தெலங்கானா உயர்நீதிமன்றம் 

    தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக வாடிவாசல் உள்ளது. இதற்காக சோதனை படப்பிடிப்பை கடந்த ஏப்ரல் மாதம் படக்குழுவினர் நடத்தினர்.

    அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அடுத்ததாக ஜூலை 23-ம்தேதி சூர்யாவின் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி டெஸ்ட் ஷூட்டின் வீடியோவை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரமாண்டத்தின் உச்சமாய் பொன்னியின் செல்வன் டீசர்!

    சூர்யா அடுத்ததாக இயக்குனர்கள் சிவா. ஞானவேல், சுதா கொங்கரா, ரவிக்குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் அடுத்த ஆண்டு இணைகிறார் சூர்யா.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி