• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Suriya: கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கிடார் கம்பி மேலே நின்று’!

Suriya: கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கிடார் கம்பி மேலே நின்று’!

சூர்யா

சூர்யா

ஒரே மாதிரியாக வைக்கப்படும் படப்பெயர்களுக்கு மத்தியில் இவை தனித்தும், வித்தியாசமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருப்பது சிறப்பு.

  • Share this:
    மணிரத்னம் க்யூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நவரசா ஆந்தாலஜியில், கௌதம் இயக்கும் படத்துக்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ஓடிடி தளங்கள் அறிமுகமான பிறகு ஆந்தாலஜிகள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. பல இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கும் குறும்படங்களை இணைந்து ஆந்தாலஜியாக வெளியிடுகின்றனர். இவ்வகை படங்களில் எதை படமாக்கலாம் என்ற கருப்பொருளை வைத்து அவரவர் பாணியில் குறும்படத்தை உருவாக்குவது வழக்கம். நவரசாவில் கோபம், சோகம், மகிழ்ச்சி, தாபம் உள்ளிட்ட ஒன்பது உணர்ச்சிகளின் அடிப்படையில் ஒன்பது இயக்குனர்கள் கதைகள் உருவாக்கி படமாக்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசம்.

    இதில் கௌதம் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் தற்போது வித்தியாசமான சொற்றொடர்களை பயன்படுத்தி பெயர் வைப்பது கௌதம் மட்டுமே. ’வேட்டையாடு விளையாடு’, ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ’வாரணம் ஆயிரம்’, ’நீதானே என் பொன்வசந்தம்’, ’அச்சம் என்பது மடமையடா’ என பாடல் வரிகளை தலைப்பாக்கியவர், ’எனை நோக்கி பாயும் தோட்டா’, ’நதிகளில் நீராடும் சூரியன்’, ’கிடார் கம்பி மேலே நின்று’ என சொற்றொடர்களையும் படத்தின் தலைப்பாக்கி வருகிறார். ஒரே மாதிரியாக வைக்கப்படும் படப்பெயர்களுக்கு மத்தியில் இவை தனித்தும், வித்தியாசமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருப்பது சிறப்பு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்துக்கு ’அக்னி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட ஆறு இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைக்கிறார்கள். ஆகஸ்டில் நவரசா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: