ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரே நாளில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன்..

ஒரே நாளில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன்..

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

Etharkum Thunindhavan | எதற்கும் துணிந்தவனின் தமிழ் பதிப்பு அனேகமாக அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் இன்று வெளியாகி இருப்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் எதற்கும் துணிந்தவனின் தமிழ் பதிப்பு அனேகமாக அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஒரு காலத்தில் தெலுங்கு படங்கள் தமிழில் நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. சிரஞ்சீவி, விஜயசாந்தி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு காட்சிகள் மாறின. தமிழ்ப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் நன்றாக ஓட ஆரம்பித்தன. இப்போது மீண்டும் பழைய காலம் திரும்பியிருக்கிறது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வரவேற்பைப் பெறுகின்றன. அதே நேரம் தமிழ்ப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் பெற்றுவந்த வரவேற்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு நமது படங்களின் தரமும் முக்கிய காரணமாகும்.

சென்ற மாதம் வெளியான வலிமை தமிழகத்தில் நல்ல வசூலைப் பெற்றாலும் ஆந்திரா, தெலுங்கானாவில் மிகச் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் நேற்று வெளியானது. தமிழகத்தில் சுமார் 7 கோடி ரூபாயை முதல் நாளில் படம் வசூல் செய்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்ட்கள் கூறுகின்றனர். ஆனால் தெலுங்கு மாநிலங்களில் படம் மிகக் குறைவான அளவே வசூலித்துள்ளது. மேலும், இன்று பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியானதால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை பல திரையரங்குகளில் இருந்து தூக்கியுள்ளனர். எதற்கும் துணிந்தவன் தெலுங்கு பதிப்பு மட்டுமே இப்போது அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும்  மிகக் குறைவான திரையரங்குகளில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.

Also read... கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குனர்களை இணைத்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்

ராதே ஷ்யாம் திரைப்படம் முன்பதிவில் மட்டும் ஹைதராபாத்தில் நான்கு கோடிகளை வசூலித்துள்ளது. இதற்கு முன் வெளியான பீம்ல நாயக் முன்பதிவில் ஹைதராபாத்தில் 4.73 கோடிகளை வசூலித்தது. எனினும் பீம்ல நாயக் தனது ஆரம்ப ஜோரை தக்க வைக்க முடியாமல் வசூலை இழந்தது. மாறாக பிரபாஸின் ராதே ஷ்யாம்  மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor prabhas, Actor Suriya