Home /News /entertainment /

கேரளாவில் திரையரங்கில் வெளியாகும் சூரரைப் போற்று!

கேரளாவில் திரையரங்கில் வெளியாகும் சூரரைப் போற்று!

சூர்யா

சூர்யா

சூரரைப் போற்று திரைப்படம் டிசம்பர் 26 கேரளாவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாலை 5 மணிக்கே பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூர்யா தயாரித்து நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கேரளாவில் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் நேரடியாக வெளியான தமிழின் முதல் மாஸ் திரைப்படம் என்ற பெருமையும் அதற்கு கிடைத்தது.

அத்துடன் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அங்கீகாரங்களும் கிடைத்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபின் படத்தை திரையரங்கில் வெளியிட சூர்யா முயற்சி செய்தார். சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் சூர்யா மீது கோபத்தில் இருந்த விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என புதிய விதிமுறை பேசினர்.

இதையடுத்து வெளியான சூர்யாவின் ஜெய் பீமும் நேரடி ஓடிடி வெளியீடு என்பதால் அவர் குடும்பத்தினர் யாருடைய படங்களையும் திரையரங்கில் வெளியிடுவதில்லை என்ற முடிவில் உள்ளனர். இப்படியொரு சூழலில் சூரரைப் போற்று திரைப்படம் டிசம்பர் 26 கேரளாவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாலை 5 மணிக்கே பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - கதாநாயகனாக 29 ஆண்டுகள்... விஜய்யை கொண்டாடிய நெல்லை ரசிகர்கள்!

பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 8 மணி காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. சூரரைப் போற்று கேரள திரையரங்குகளில் வெளியாவது தமிழகத்தில் அப்படத்தை எதிர்த்தவர்களுக்கு கடும் எரிச்சலை கிளப்பியிருக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya, Soorarai Pottru

அடுத்த செய்தி