Soorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று!

சூரரைப்போற்று

நேரடியாக இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி லாபம் சம்பாதித்தது.

  • Share this:
    சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு சர்வதேச கௌரவம் கிடைத்திருக்கிறது.

    உலகம் முழுவதும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டாலும் ஒரு சில மட்டுமே, 'சர்வதேச' என்பதற்கு அடையாளமாக இருக்கின்றன. அதில் ஒன்று ஷாங்காய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (SIFF). இதில் ஒரு படம் திரையிடப்பட தேர்வாவது கௌரவம். அது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது.

    எளிய மக்களும் குறைவான கட்டணத்தில் விமானத்தில் செல்ல வேண்டும் என கனவு கண்டவர் ஏர் டெக்கான் நிறுவனத் கோபிநாத். அவரது வாழ்க்கையை தழுவி சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நேரடியாக இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி லாபம் சம்பாதித்தது. இதனை தெலுங்கு மற்றும் இந்தியில் 'டப்' செய்து வெளியிட்டுள்ளனர்.

    இந்த வருடம் ஜுன் 11 முதல் 20 வரை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் பனோரமா பிரிவில் திரையிட சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. இது படத்திற்கு கிடைத்த மிக உயரிய கௌரவம். படக்குழுவுக்கு நம் பாராட்டுகள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: