Home /News /entertainment /

15 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று!

15 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று!

சூர்யா

சூர்யா

சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று', ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியது.

    15 மாதங்களுக்குப் பிறகு சூர்யாவின் சூரரைப்போற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    சூர்யாவின் 'சூரரைப் போற்று' ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். 2020 தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக வேண்டிய இப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது. தங்கள் விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தின் படத்தை பெரிய திரைகளில் ரசிக்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர் சூர்யா ரசிகர்கள்.

    சூரரைப்போற்று பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாக அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து இன்று மதுரையில் உள்ள திரையரங்கில் படம் வெளியாகியாது. அதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    கானா பாட்டிற்கு பிக் பாஸ் பிரலங்களுடன் குத்தாட்டம் போட்ட ராஜு ஜெயமோகன் - வீடியோ!

    சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று', ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியது. இந்த கிளாசிக் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. அவருடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன் பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் குமார் அமைத்திருந்தார். 'சூரரைப் போற்று' 93-வது அகாடமி விருதுகளுக்கு நுழைந்த இப்படம், இறுதிக்கட்டத்தில் வெளியேறியது.

    சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சூரரைப்போற்று படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி