• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அக்டோபர் 30-ம் தேதி ‘சூரரைப்போற்று’ ரிலீசாவதில் சிக்கல்

அக்டோபர் 30-ம் தேதி ‘சூரரைப்போற்று’ ரிலீசாவதில் சிக்கல்

சூர்யா

சூர்யா

சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பும் எழுந்தது.

    மேலும் படிக்க: மத்திய அரசின் விருது - அரசிதழில் 2 தமிழ்ப்படங்கள்

    இந்நிலையில் அக்டோபர் 30-ம் தேதி திட்டமிட்டபடி சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் சூரரைப்போற்று படக்குழு இன்னும் பெறவில்லை என்றும் அதனால் இந்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கான அமேசான் பட்டியலில் இருந்தும் சூரரைப் போற்று திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிப்பு வெளியிடாததால் சூரரைப்போற்று திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: