Soorarai Pottru: ஆஸ்கர் விருது பட்டியலில் முந்திச் செல்லும் சூரரைப்போற்று

சூரரை போற்று

ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் ‘சூரரைப்போற்று’ படம் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

அதேபோல் ஆஸ்கர் போட்டியில் பொதுப்பிரிவில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

உலகின் பல நாடுகளிலிருந்து 1000 திரைப்படங்கள் பொதுப்பிரிவில் போட்டியிட குவிந்த நிலையில் அனைத்தையும் பார்த்துவிட்டு அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 366 படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் சூரரைப்போற்று படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதையறிந்து படக்குழுவினரும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியலை விரைவில் ஆஸ்கர் குழுவினர் அறிவிப்பார்கள். மார்ச் 5 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை வாக்கெடுப்பு நடக்கிறது. பின்னர் 15-ம் தேதி பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது.

ஆஸ்கர் விருது மட்டுமின்றி 78-வது கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் ‘சூரரைப்போற்று’ போட்டியிடுகிறது. இந்த விருது விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: