நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓடிடி-யில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்கள் 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய் பீம்' ஆகியவை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டன. அவை விரைவில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன. சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய் பீம்' திரைப்படங்கள் ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை சென்னை திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. சூர்யா தனது பிறந்தநாளை ஜூலை 23 அன்று கொண்டாடுகிறார். இதையடுத்து ரசிகர்களுக்காக அவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் சுதா கொங்கரா இயக்கிய பயோபிக். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் மக்களுக்கு விமான சேவையை கொடுக்கும் நோக்கில் தொழிலதிபர் ஜி.ஆர்.கோபிநாத் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றியது. படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். எமோஷனல் காட்சிகள் நிறைந்த இப்படம் பலரின் இதயங்களை வென்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண் கலங்கிய பிரிகிடா
மறுபுறம், 'ஜெய் பீம்' ஒரு சீரியஸான திரைப்படம். இது நிஜ சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழகத்தில் குடியேறிய பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக வழக்கறிஞர் சந்துரு எவ்வாறு போராடினார் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டது. இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் காவலில் மரணம் அடைகிறார். அவரது மரணத்துக்கு நீதி கிடைத்ததா என்பது மீதிக் கதை. இதில் நீதியரசர் சந்துருவாக சூர்யா நடித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் தனது அடுத்த படமான 'வாடிவாசல்' படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். அதோடு இயக்குனர்கள் சுதா கொங்கரா மற்றும் சிவா ஆகியோரின் படங்களிலும் நடிக்கவுள்ளார் சூர்யா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.