Home /News /entertainment /

கேரளாவில் திரையரங்குகளில் வெளியான 'சூரரைப் போற்று' - சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

கேரளாவில் திரையரங்குகளில் வெளியான 'சூரரைப் போற்று' - சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூரரைப் போற்று முதலில் ஓடிடியில் வெளியானதால், அதனை வெளியிடப்போவதில்லை என்று தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர்.

சூரரைப் போற்று முதலில் ஓடிடியில் வெளியானதால், அதனை வெளியிடப்போவதில்லை என்று தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர்.

சூரரைப் போற்று முதலில் ஓடிடியில் வெளியானதால், அதனை வெளியிடப்போவதில்லை என்று தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர்.

    கேரளாவில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஓடிடி-யில் வெளியான சூரரைப்போற்று படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்ததோடு, ஆஸ்கர் பொதுப் பிரிவிலும் இப்படம் போட்டியிட்டது. இந்த நிலையில் தற்போது இப்படம் கேரளாவில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் இப்படத்தை கேரளாவை சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டாடி வருகின்றனர்.

     



    சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் நேரடியாக வெளியான தமிழின் முதல் மாஸ் திரைப்படம் என்ற பெருமையும் அதற்கு கிடைத்தது.

    அத்துடன் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அங்கீகாரங்களும் கிடைத்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபின் படத்தை திரையரங்கில் வெளியிட சூர்யா முயற்சி செய்தார். சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் சூர்யா மீது கோபத்தில் இருந்த விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என புதிய விதிமுறை பேசினர்.

    Also Read :  கருத்துரிமை பறிப்பு: திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டம்!

    இதையடுத்து வெளியான சூர்யாவின் ஜெய் பீமும் நேரடி ஓடிடி வெளியீடு என்பதால் அவர் குடும்பத்தினர் யாருடைய படங்களையும் திரையரங்கில் வெளியிடுவதில்லை என்ற முடிவில் உள்ளனர். இப்படியொரு சூழலில் சூரரைப் போற்று திரைப்படம் கேரளாவில் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி