Home /News /entertainment /

2022 பிப்ரவரியில் மோதும், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள்

2022 பிப்ரவரியில் மோதும், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள்

பிப்ரவரியில் வெளியாகும் படங்கள்

பிப்ரவரியில் வெளியாகும் படங்கள்

2022 அஜித்தின் வலிமை படத்துடன் தொடங்குகிறது. இரண்டாவது மாதம் பிப்ரவரி 4-ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ் சினிமா பலபடிகள் முன்னேறியிருக்கிறது. இந்த வருடம் மாஸ்டர், சுல்தான், கர்ணன், கோடியில் ஒருவன், டாக்டர், மாநாடு என பல வெற்றிப் படங்கள். இதில் மாஸ்டர், கர்ணன், டாக்டர் மூன்றும் ப்ளாக் பஸ்டர் ஹிட்கள்.

இந்த வருடம் முடிவதற்குள் மேலும் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தரத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இது முக்கியமான ஆண்டு. கர்ணன், மண்டேலா, சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் என பல படங்கள் இந்தியாவை தாண்டியும் பேசப்பட்டன. வரவிருக்கிற ஆன்டி இண்டியன், ஜெயில், ரைட்டர் படங்கள் எதிர்பார்ப்புக்குரியவை.

2022 அஜித்தின் வலிமை படத்துடன் தொடங்குகிறது. இரண்டாவது மாதம் பிப்ரவரி 4-ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது. அதே பிப்ரவரியில் மேலும் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. முதலில் சிவகார்த்திகேயனின் டான்.

சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இந்தப் படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகியிருக்கிறது. அதனால் பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி 11-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். எதற்கும் துணிந்தவன் 4 ஆம் தேதி வெளியாகி ஒரே வாரத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்குவார்களா என்ற சந்தேகத்தில் பிப்ரவரி 18-ஆம் தேதியை தற்காலிகமாக 'டிக்' செய்து வைத்துள்ளனர்.

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எப்ஐஆர் திரைப்படத்தையும் பிப்ரவரியில் வெளியிடுகின்றனர். அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தேதி இன்னும் முடிவாகவில்லை எனினும் 11 ஆம் தேதிதான் அவர்களின் இலக்கு.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் பிப்ரவரியில் வெளியிடுகின்றனர். பெயரிலேயே காதலை கொண்டுள்ள இந்தப் படத்தையும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாகத்தான் திட்டம். ஆக, இப்போதே சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் பிப்ரவரியை டார்கெட் செய்துள்ளன. இதில் சூர்யா படம் வருவது உறுதி. தேதியும் இறுதி செய்தாயிற்று. மற்றப் படங்கள் எந்த தேதியில் வெளியாகும் என்பதை எதற்கும் துணிந்தவனின் வெற்றி முடிவு செய்யும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya, Actor Vijay Sethupathi, Sivakarthikeyan

அடுத்த செய்தி