ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

100 கோடிக்கு விலை போன சூர்யா 42 இந்தி உரிமம்!

100 கோடிக்கு விலை போன சூர்யா 42 இந்தி உரிமம்!

சூர்யா 42

சூர்யா 42

பாலா இயக்கிய 'வணங்கான்' படத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய சூர்யா, விரைவில் இயக்குனர் வெற்றிமாறனுடன் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யா 42 படத்தின் இந்தி உரிமை 100 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து 2023ல் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

தற்போதைய தகவல்களின்படி, தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் கடா சூர்யா 42 படத்தின் இந்தி உரிமையை ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளாராம். இந்தி உரிமையைத் தவிர, படத்தின் இந்தி சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் அவர் பெற்றுள்ளாராம்.

பாலா இயக்கிய 'வணங்கான்' படத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய சூர்யா, விரைவில் இயக்குனர் வெற்றிமாறனுடன் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் தோன்றிய ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தின் அடிப்படையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சூர்யா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் நடிகர் ஜெரெமி ரென்னர் கவலைக்கிடம்

மேலும், அக்‌ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் சூர்யா முக்கிய வேடத்தில் சிறப்பு கதாபாத்திரமாக நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya