ஆகாயத்தில் பாடல் ரிலீஸ்... அன்பான ஃபேன்ஸ்களுக்கு அப்டேட் அள்ளிக் கொடுத்த சூரரைப் போற்று டீம்!

ஆகாயத்தில் பாடல் ரிலீஸ்... அன்பான ஃபேன்ஸ்களுக்கு அப்டேட் அள்ளிக் கொடுத்த சூரரைப் போற்று டீம்!
சூரரைப் போற்று செகண்ட் லுக்
  • Share this:
சூரரைப் போற்று திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் நேரம் மற்றும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை விமான நிலையத்தில் வைத்து நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சென்னை சர்வதேச விமானநிலையத்தில் படக்குழு சிறப்பு அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்து இன்று மட்டும் 3 அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான இரண்டாவது அப்டேட்டில் படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடலை நடுவானில் பறக்கும் விமானத்தில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: விஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி! - மதுரையில் போஸ்டர் பரபரப்பு!

First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்