Home /News /entertainment /

பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் வினய்?

பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் வினய்?

சூர்யா - வினய்

சூர்யா - வினய்

சூர்யாவின் 40-வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிகக் வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் உருவான‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்த சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீட்டில் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்திருந்தது.

இதையடுத்து சூர்யா இல்லாத காட்சிகளை முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கி முடித்தது படக்குழு. இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் அந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Kollywood, Suriya

அடுத்த செய்தி