ரஜினி, அஜித்தைத் தொடர்ந்து, அதிரடி முடிவெடுத்த நடிகர் சூர்யா...

தனது படத்தில் பணியாற்றுபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடிகர் சூர்யா அதிரடி முடிவெடுத்துள்ளார்.

ரஜினி, அஜித்தைத் தொடர்ந்து, அதிரடி முடிவெடுத்த நடிகர் சூர்யா...
நடிகர் சூர்யா
  • Share this:
கொரோனா முற்றிலும் ஒழிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே அருவா படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தான் ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் திரைப்பட படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை உள்ளிட்ட பெரிய படங்களின் ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இயல்புநிலை திரும்பிய பின்னரே படப்பிடிப்பை தொடங்க ரஜினி,அஜித் உள்ளிட்டோர் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அதேமுடிவை நடிகர் சூர்யாவும் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப்போற்று படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த அருவா படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: கொரோனா பரவலை தடுக்க தல அஜித் கொடுத்த அசத்தல் ஐடியாசூர்யாவின் இந்த முடிவால், கொரோனா முற்றிலும் ஒழிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே அருவா படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தான் ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading