நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையவிருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். அதோடு அவர் நடித்து முடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வ்க்கீலாக நடித்துள்ளார் சூர்யா. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவுடன் தனது அடுத்தப்படத்திற்காக மீண்டும் இணைகிறார் சூர்யா. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது பாலாவின் ‘நந்தா’ திரைப்படம் தான். அதன் பிறகு விக்ரமுடன் இணைந்து பாலாவின் ‘பிதாமகன்’ படத்திலும் நடித்தார் சூர்யா. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருக்கிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள
சூர்யா, “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து
அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என்
பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.