ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேசிய விருது : பட்டு வேட்டி சட்டையில் பக்காவாக விருதினை வாங்கிய சூர்யா!

தேசிய விருது : பட்டு வேட்டி சட்டையில் பக்காவாக விருதினை வாங்கிய சூர்யா!

தேசிய விருது பெற்ற சூர்யா

தேசிய விருது பெற்ற சூர்யா

National Award | கடந்த ஜூன் மாதம் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் விருது வழங்கப்பட்டது. தமிழில் தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டனர்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வானது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சூர்யா, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற தமிழ்த்திரையுலகினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Published by:Murugadoss C
First published:

Tags: Actor Suriya, National award